நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத் துறையின் அதிரடி உத்தரவு!

 
ration shop

ரேஷனில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ration shop

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசின் பொதுவிநியோக திட்டத்தின் படி அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.  இந்த சூழலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் பொருட்கள் தரமில்லாமல் இருக்கும் பட்சத்தில் அதை திரும்பி அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நியாயவிலை கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை மீண்டும் விநியோகம் செய்யக்கூடாது நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. நியாய விலை கடைகள் உட்புறமும் , வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும்.  தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும்.  கிடங்குகளில் அரிசி தரமாக உள்ளதா? என ஆய்வு செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Ration shop

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாத உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கூட்டுறவுத்துறை,  குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசிய பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.