'தெய்வ மகள்' சீரியல் காப்புரிமை...சன் டிவிக்கு நோட்டீஸ் அனுப்பிய விகடன் குழுமம்!!

 
tn

தெய்வ மகள் தொடரின் காப்புரிமை விவகாரத்தில் விகடன் குழுமம் சன் நிறுவனத்திற்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தயாரித்த தெய்வமகள்  தொடரை விகடன் ஒளித்திரை சார்பில் இயக்குனர் S. குமரன் என்பவர் இயக்க வாணி போஜன், கிருஷ்ணா மற்றும் ரேகா கிருஷ்ணப்பா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தனர். இது தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் மிக அதிகமான டிஆர்பி ரேட்டிங்கை பெற்ற நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதியுடன்  1,466 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

tn

தெய்வமகள் சீரியலின் காப்புரிமை விகடன் குழுமத்திற்கு மட்டுமே உள்ளது. இதில்  சன் டிவிக்கு 60% விளம்பரம் கிடைக்கும் நிலையில்  40% மட்டுமே விகடனுக்கு சென்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் முதல், விகடன் சன் டிவி உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொண்டது. அதன் தொடர்கள் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகின்றன. 

tn

தெய்வமகள் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ஆனதால், அதை பல மொழிகளில் ரீமேக் செய்ய விகடன் முடிவு செய்தது. இதனால் தெய்வமகள் சீரியலை  பெங்காலி மொழியில் ரீமேக் செய்ய முயற்சித்தபோது, ​​சன்டிவியின் பெங்காலி சேனலில் தெய்வமகள் ஒளிபரப்பாகியது  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன் தெய்வமகள் தொடரை  அசாமிய மொழியில் "டெபி" என்று ரீமேக் செய்து செப்டம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை ஒளிபரப்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரமடைந்த விகடன் குழுமம்  சன் நிறுவனத்திற்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  பதிப்புரிமை மீறலுக்கு ரூ.100 கோடி மற்றும் 1.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.