சசிகலாவுடன் இணைந்தது திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம்!!

 
tn

அண்ணா திராவிடர் கழகத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் இணைத்தார் அக்கட்சியின் நிறுவனர் திவாகரன்

tn

அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில் பொதுக்குழுவில் நேற்று எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.  இது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்த சூழலில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது செல்லாது என்றபோது ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது எவ்வாறு செல்லும் என்று சசிகலா ஒருபுறம் கேள்வி எழுப்பி உள்ளார்.  தானே அதிமுகவின் பொது செயலாளர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அட்

இந்த சூழலில் சசிகலாவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனிக்கட்சி தொடங்கிய சசிகலாவின் அண்ணன் திவாகரன் தனது அண்ணா திராவிட கழகத்தை சசிகலாவுடன் இணைப்பதாக நேற்று அறிவித்தார் . சசிகலாவுக்கு அனைவரும் உதவி செய்யக்கூடிய கட்டாயத்தில் இருப்பதாகவும்,  தமிழகம் முழுவதிலிருந்து 2500 க்கும் மேற்பட்ட இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவோடு இணைய  உள்ளனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

tn

இந்நிலையில்  சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைப்பு விழா தஞ்சையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சசிகலாவுடன் அண்ணன் திவாகரன்,  கட்சியும்  இணைந்தது. சசிகலா முன்னிலையில் மேடையில் பேசும்போது திவாகரன் கண்ணீர் சிந்தினார்.