கள்ளக்காதலை கண்டித்த மனைவி- கணவன் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கள்ளகாதலை மனைவி கண்டித்ததால்  மனமுடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Grappling With The Rise Of Work-Related Suicide During The Pandemic: How To  Support Yourself And Fellow Coworkers

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே  குமாரபுது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (32). இவருக்கு  திருமணமாகி  மனைவி மற்றும் குழந்தைகளுடன் உள்ளூரில் வசித்து வந்தார். இந்நிலையில்  அதே ஊரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் ரமேஷுக்கு தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராஜேஸ்வரி தற்போது சென்னையில் கணவருடன் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஊரில் கொடை விழா நிகழ்ச்சிகாக ராஜேஸ்வரி சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது ரமேஷ் பழைய நட்பில் ராஜேஸ்வரியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் ரமேஷ் மனைவியிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து இரவு வீட்டுக்கு வந்த தனது கணவரை கண்டித்துள்ளார்.
இதனால் குடும்பத்தில்  பிரச்சனை வெடிக்கவே  மனமுடைந்த ரமேஷ் யாரும் இல்லாத நிலையில்  தனது வீட்டில் தூக்குமாட்டி  தற்கொலை  செய்து கொண்டார். 

இதனையடுத்து வள்ளியூர் போலீசார் ரமேஷின் உடலை கைப்பற்றி மேல் விசாரணைக்காக அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.கொடை விழா முடிந்த நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட விஷயம் அவ்வூர் பகுதி மக்களிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.