மேட்டூர் அனல் மின் நிலைய பணிகள் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

 
மெ

மேட்டூர் அனல் மின் நிலைய பணிகள் தொடர்பான டெண்டரை எதிர்த்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பிரிவில் பல்வேறு பணிகளுக்காக கோரப்பட்ட டெண்டரை எதிர்த்து அதிமுக முன்னாள் கவுன்சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,  நீதிபதி மாலா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது .

ஹ்

விசாரணையின் போது தமிழக அரசு மற்றும் மின் உற்பத்தி பகிர்மான கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  மனுதாரர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.  அதனால்  இந்த வழக்கு அரசியல் நோக்குடன் தாக்குதல் செய்யப்பட்டிருக்கிறது.   ஆகவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர்.

 இதன் பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள்,   டெண்டர் நடவடிக்கைகளால் அரசுக்கு எப்படி இழப்பு ஏற்படும் என்பது குறித்து மனுதாரர் எதுவும் விளக்கவில்லை. மேலும்,  டெண்டர் நிபந்தனைகளை பொருத்தவரை அது அரசின் கொள்கை முடிவு.   டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்ட விதிகளுக்கு முரணாக டெண்டர் விதி நிபந்தனைகள் இல்லை .  ஆகவே இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொல்லி , டெண்டரை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.