இயக்குனர் பாரதிராஜா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

 
bharathiraja

நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குனர் பாரதிராஜா வீடு திரும்பினார்.

After the treatment, the health is normal... Bharathiraja is about to  return home..! | சிகிச்சைக்குப் பிறகு சீரானது உடல்நிலை… வீடு  திரும்பவிருக்கும் பாரதிராஜா..!

இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் திடீரென நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் . அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.


சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21.08.22 அன்று  இரவு காய்ச்சல் மற்றும் இணை உடல்நல குறைவுடன் இயக்குனர் பாரதிராஜா  அனுமதிக்கப்பட்டார்.  உடல் நல பாதிப்பில் இருந்து மீள மருத்துவமனையிலேயே தங்கி நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் 26.08.22 அன்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 27.08.22 அன்று இயக்குனர் பாரதிராஜா அதிகாரப்பூர்வமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நான் விரைவில் மீண்டு வருவேன் என அறிக்கை வாயிலாக தெரிவித்தார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்கள் முன்பு பொது பிரிவிற்கு மாற்றப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.