இயக்குநர் அமீர் குடும்பத்தில் நிகழ்ந்த துயரம் - திரையுலகினர் இரங்கல்!!

 
tn

பிரபல இயக்குநர் அமீரின் தாயார் வயது முதிர்வால் காலமாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில்  பிரபல இயக்குநராக வலம் வருபவர் அமீர். மதுரையை சேர்ந்த இவர் பொருளியல் படித்துள்ளார் . 2022 ஆம் ஆண்டில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரை துறையில் நுழைந்த இவர் பின்னர் மௌனம் பேசியதே  திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

tn

ராம் ,பருத்திவீரன், ஆதி பகவன் ,பேரன்பு கொண்ட பெரியோர்களே உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட  படங்களை இயக்கியுள்ள அமீருக்கு என்று தமிழ் சினிமாவில் தனி இடம் உள்ளது.  பட இயக்குநராக மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வரும் அமீர்,  டீம் ஒர்க் புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பெயரில் சொந்தப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

tn

இந்நிலையில் இயக்குநர் அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி  வயது முதிர்வு காரணமாக  உயிரிழந்துள்ளார்.  அவரது உடல் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள அமீரின் வீட்டில் வைக்கப்பட உள்ளது.  அமீரின் தாயாரின் மறைவுக்கு  திரை உலகை சேர்ந்த பலரும் தங்கள் இரங்கலை  தெரிவித்து வருகின்றனர்.