குடியரசு தின விழாவை புறக்கணித்தாரா திமுக எம்.பி.,?

 
tn

புதுக்கோட்டையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் அரங்கேறிய போது திமுக மாநிலங்களவை  உறுப்பினர் எம்.எம். அப்துல்லா விழாவை புறக்கணித்து சென்றதாக கூறப்படுகிறது.

tn

நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று தேசிய கொடியை ஏற்றினார்.  விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.பி. , எம்எல்ஏக்கள்,  அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இவர்களுக்கு என தனியாக இருக்க ஒதுக்கப்பட்டிருந்தது.  இந்த சூழலில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா ஆயுதப்படை மைதானத்திற்கு வருகை புரிந்தார் . அப்போது பார்வையாளர் பகுதியில் அமர்வதற்காக வந்தபோது எம்எல்ஏ,  எம்.பி., ஆகியோருக்கு  முறையான இருக்கை ஒதுக்கீடு குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக அவர் விழாவை புறக்கணித்து காரில் ஏறி சென்றதாக கூறப்பட்டது.

tn

இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு எம்.பி. எம். எம். அப்துல்லா அளித்த பேட்டியில் , தான் குடியரசு தின விழாவை புறக்கணிக்கவில்லை . அவசர வேலை இருந்ததன் காரணமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.