"இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈந்த மன்னர் தீரன் சின்னமலை" - ஈபிஎஸ், தினகரன் ட்வீட்!!

 
ttn

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் 1756ல் பிறந்தவர் தீர்த்தகிரி கவுண்டர். வாள், சிலம்பம், மல்யுத்தம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கிய இவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார். 1801ல் ஈரோடு காவிரி கரையிலும், 1802ல் ஓடாநிலையிலும், 1804ல் அரச்சலுாரிலும் நடந்த போர்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். இதையடுத்து ஆங்கிலேயர்கள் இவரை 1805 ஜூலை 31ல் அவரை துாக்கிலிட்டனர். இருப்பினும் அவர் உடல் ஆகஸ்ட் 3ஆம் தேதியே அடக்கம் செய்யப்பட்டது.அந்த வகையில் இன்று மாவீரன் தீரன் சின்னமலை 217ஆம் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

tn


இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், வீரம் நிறைந்த தமிழ் மண்ணில் பிறந்து, ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, இறுதி மூச்சு வரை எதிரிகளுக்கு அடிபணியாமல் எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த விடுதலை போராட்ட மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்..




அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன், இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈந்த மன்னர் தீரன் சின்னமலை அவர்கள் மண்ணில் விதைக்கப்பட்ட நாள்  இன்று! தன் இறுதி மூச்சு வரை சமரசம் இல்லாமல் ஆங்கிலேயரை எதிர்த்த அந்த மாவீரரின் நினைவை, சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாம் எந்நாளும்  போற்றி வணங்கிடுவோம்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.