சதுரகிரி மலைக்கு பக்தர்கள் 13 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி!

 
sathuragiri

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் 13 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

sathuragiri

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலிலுக்கு ஏராளமான பக்தர்கள் சிரமம் பாராமல் வந்து செல்வது வழக்கம். அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

sathuragiri

இந்நிலையில் புரட்டாசி அமாவாசை நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.  நாளை முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது