சதுரகிரி கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி!!

 
tn

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

sathuragiri
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம், பௌர்ணமி மற்றும் அமாவாசை முன்னிட்டு தலா 4 நாட்கள் வீதம் 8 நாட்கள் மாதம் தோறும் பக்தர்கள் மலை  ஏறி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.  அந்த வகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் பொதுமக்கள் மலையேறும் நேரம் காலை 5 மணி முதல் மூன்று மணி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதன் காரணமாக இன்று முதல் 29ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

sathuragiri

 கொரோனா காரணமாக கடந்த  இரண்டு ஆண்டுகளாக ஆடி அமாவாசை திருவிழாவை ஒட்டி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அடிவார பாதை வழியாக பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என்றும்  இரவு நேரங்களில் கோவிலிலும் , வனப்பகுதியிலும் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.