என்.எம்.மணிவர்மாவின் மனைவி தேவகிவர்மா மறைவு - தலைவர்கள் இரங்கல் !!

 
tn

மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.எம்.மணிவர்மாவின் மனைவி தேவகிவர்மா காலமானார். 

Death

இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குலசேகரனின் மாமியாரும், மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.எம்.மணிவர்மாவின் மனைவியுமான தேவகிவர்மா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரின்  ஆன்மா சாந்தியடையட்டும் " என்று  பதிவிட்டுள்ளார். 


 தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், வன்னியர் பேரவையின் தலைவராக இருந்தவருமான மறைந்த திரு. N.M.மணிவர்மா அவர்களின் மனைவி திருமதி M.தேவகி வர்மா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். திருமதி. தேவகி வர்மா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொண்டு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் குலசேகரனின் மாமியாரும், மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.எம்.மணிவர்மாவின் மனைவியுமான தேவகிவர்மா  இன்று காலமானார் என்ற செய்தியறிந்து  வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் நீதியரசர் குலசேகரன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.