11, 12ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு - அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..

 
பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 22 முதல் 30ம் தேதி வரை 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு நடைபெறும் என  பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  

 கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காராணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த சூழலில், இந்த ஆண்டு  கோடை விடுமுறைக்கு பின்பு 12ம் வகுப்புக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்புக்கு ஜூன் 27ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில்,  11, 12-ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 22 முதல் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக  பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. தொடர்ந்து  காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

11, 12ம் வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு - அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை..

விரிவான காலாண்டு அட்டவணையையும்  மாவட்டம் வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது. அத்துடன், 11  மற்றும்  12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போலவே காலாண்டுத் தேர்வுகளையும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான  வினாத்தாள்கள் தேர்வுத் துறை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும்    தெரிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அட்டவணையின்படி,

12ம் வகுப்பு :

செப்.  22  - மொழிப்பாடம்
செப் . 23  - ஆங்கிலம்
செப்.  26 - கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல்
செப். 27 - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன்
செப்.28 -  வேதியியல், கணக்கியல், புவியியல்,
செப். 29 -  கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல்
செப். 30 -   தாவரவியல், உயிரியியல், வரலாறு, பேசிக் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக மேலாண்மை, வணிக கணக்கு மற்றும் புள்ளியல்  

  பள்ளிக்கல்வித்துறை!!

11ம் வகுப்பு :

செப்.  22  - ஆங்கிலம்
செப் . 23  - மொழிப்பாடம்
செப்.  26 - வேதியியல், கணக்கியல், புவியியல்
செப். 27 - தாவரவியல், உயிரியியல், வரலாறு, பேசிக் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக்  ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அலுவலக  மேலாண்மை, வணிக கணக்கு மற்றும் புள்ளியல்
செப்.28 -  கணினி அறிவியல், கணினி அப்ளிகேஷன், வீட்டுமுறை அறிவியல், அரசியல் அறிவியல்
செப். 29 - கணிதம், விலங்கியல், வணிகவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் அறிவியல்
செப். 30 -   இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், தொழில்சார் திறன் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது.