தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு பாதிப்பு!

 
dengue

தமிழகத்தில் தற்போது காய்ச்சல் என்பது அதிகரித்து மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.  தற்போது சராசரியாக 3,000 பேர் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  எந்த காரணத்தினால் காய்ச்சல் ஏற்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும்.  டெங்கு ,மலேரியா ,டைபாய்டு, எலி காய்ச்சல், ஸ்கிரிப்ட் டைபர்ஸ் ஆகியவை தமிழ்நாட்டில் பொதுவான காய்ச்சல் நோய்கள்.  காய்ச்சல் வந்தால் கொரோனா மற்றும் பன்றி காய்ச்சலும் இருக்க வாய்ப்புள்ளது. 

dengue
குறிப்பாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் என்பது அதிகரிக்க தொடங்கி விட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 3396 பேர் டெங்கு   காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணிகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள்  மழை மற்றும் குளிர்காலங்களில் அதிகமாக பெருகும். இவற்றை  தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கடந்த 2020 ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 2410 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டில் 6039 பேருக்கு பாதிப்பு இருந்தது. தற்போது நிகழாண்டில் மாநிலம் முழுவதும் 3396 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிக்கன் குனியா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களும் தற்போது பரவ தொடங்கியுள்ளன.

dengue

இதன் காரணமாக மழைப்பொழிவு பொழிவுக்குப் பிறகு சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டயர், உடைந்த மண் பாண்டங்கள் ,தேங்காய் சிரட்டைகள் ,பெயிண்ட் டப்பாக்கள் ,தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீர் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே உடனடியாக இவற்றை அகற்ற வேண்டும் என  பொது சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.