வ.உ.சியின் ஒரிஜினல் கையெழுத்தில் உள்ள ‘பிள்ளை?’நீக்கம் - வலுக்கும் எதிர்ப்பு

 
வ்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை என்று அழைக்கப்பட்டு வருகிறார்.   சிதம்பரம் தனது கையெழுத்திலும் வ.உ. சிதம்பரம் பிள்ளை என்று கையெழுத்திட்டு வந்திருக்கிறார்.   ஆனால்  வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 150வது நாள் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்டிருக்கும் சிறப்பு மலரில் வ. உ. சியின் ஒரிஜினல் கையெழுத்தில் இருந்த பிள்ளை என்ற சொல்லை நீக்கி அச்சடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.   இதனால் பலரும் கண்டனம்  விடுத்து வருகின்றனர். 

உ

வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை எனும் வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கடந்த  நவம்பர் 18ஆம் தேதி அன்று சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.    தமிழ்நாடு அரசின் தமிழரசு பத்திரிகை அலுவலகத்தில் அச்சிடப்பட்ட இந்த சிறப்பு மலர் 260 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

 இந்த சிறப்பு மலரின் முதல் பக்கத்தில் வ. உ. சி படத்துடன் அவரது ஒரிஜினல் கையெழுத்து இடம்பெற்றுள்ளது.   ஆனால் ஒரிஜினல் கையெழுத்தில் இருந்த ‘பிள்ளை’ என்ற சொல்லை நீக்கி வ.உ.சிதம்பரம் என்று மட்டும் அச்சிட்டு உள்ளனர்.   இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ச்

 வ. உ .சி தன் வாழ்நாள் முழுவதும் வ.உ. சிதம்பரம் பிள்ளை என்றே கையெழுத்திட்டு இருக்கிறார்.   பல ஆவணங்களில் இதைக் காண முடிகிறது.   அப்படி இருக்கும் போது தமிழக அரசு வெளியிட்டிருக்கும் சிறப்பு மலரில் மட்டும் இல்லை என்ற சொல்லை நீக்கியது ஏன்? ஜாதி பெயரை அரசு குறிப்பிடுவதில்லை என்று சாக்குபோக்கு சொல்லலாம்.   ஆனால் 2000 ஆண்டுக்கு பின் வந்த அரசின் உத்தரவு தான் அது.   வாழ்ந்து மறைந்த தலைவர்களுக்கு எல்லாம் எப்படி பொருந்தும்?

அப்படியே எடுத்துக்கொண்டாலும்,  மற்ற தலைவர்களின் பெயர்களில் உள்ள பட்டப் பெயர்களை  அரசு நீக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்த விஷமத் தனத்தை முதல்வர் புரிந்து கொண்டு திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.