முதல்வர் வர தாமதம்: பொன்னியின் செல்வன் பார்த்த எம்.எல்.ஏக்கள்

 
ப்

வீடியோ கான்பரன்ஸ் மூலமாக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க விருந்த நிகழ்ச்சி தாமதமானதால் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரையில் பொன்னியின் செல்வன் படம் பார்த்து ரசித்துள்ளனர் திமுகவின் எம்எல்ஏக்களும் உடன்பிறப்புகளும் . இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 தஞ்சாவூரில் அரண்மனை அருகே காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.   இந்த மார்க்கெட் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.   இந்த மார்க்கெட்டில் இருந்த கடைகளின் கட்டிடங்கள் பழுதடைந்து விட்டதால் இந்த கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.   ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 17. 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காமராஜ் காய்கறி மார்க்கெட் சீரமைக்கப்பட்டுள்ளது.

ம்

இந்த மார்க்கெட்டில் சிறிய பெரிய கடைகள் என்று 304 கடைகளும் 170 இருசக்கர வாகனங்கள் நிறுத்தவும்,  30 நான்கு சக்கர வாகனம் நிறுத்தவும் 20 கனரக லாரிகள் நிறுத்தவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

 இன்று காலையில் காணொளி காட்சி மூலமாக முதல்வர் ஸ்டாலின் இந்த காமராஜ் மார்க்கெட்டை திறந்து வைப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது.  இதற்காக திமுக எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்,  திமுகவினர் நிகழ்ச்சியில் திரண்டு இருந்தனர்.

 முதல்வர் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக வருவதற்கு தாமதமானதால் அந்த இடைவெளியில் எல்ஈடி திரையில் பொன்னியின் செல்வன்  திரைப்படத்தை பார்த்து ரசித்தனர்.  பொன்னியின் செல்வம் திரைப்படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.  அப்படி இருக்கையில் அந்த படத்தை திறந்தவெளியில் பார்த்தது  ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.