தீபாவுக்கு குழந்தை பிறந்தது! மிரட்டல்களால் சொல்ல தயக்கம்

 
d

 ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.  பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் வாடகைத்தாய் மூலமாக சென்னை வேளச்சேரியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்கிறது. 

de

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா.  அவரது கணவர் மாதவன்.  இத்தம்பதிக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறது.   இதற்காக இருவரும் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில் வாடகத்தாய் மூலமாக தீபாவுக்கு குழந்தை பிறந்து இருக்கிறது .  சென்னை வேளச்சேரியில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்து இருக்கிறது.  5 வருடங்கள் சிகிச்சைக்கு பின்னர் தற்போது குழந்தை பிறந்திருக்கிறது.   இதற்கு முன்பு பலமுறை கருத்தரித்து அப்போது குழந்தை பிறப்பதில் சிக்கல்கள் இருந்துள்ளன. இதனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கிறது .

dm

தற்போது சென்னையில் உள்ள சென்னை வேளச்சேரி உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்து இருக்கிறது.   பிறந்த குழந்தை என்ன குழந்தை என்பது குறித்தும் எப்படி அந்த குழந்தை எப்படி பிறந்தது என்பது குறித்தும்  வெளிப்படையாக பேச தயக்கம் காட்டி வருகிறார் தீபா.  சில தினங்களில் என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதை மட்டும் வெளிப்படையாக தானும் கணவருடன் சேர்ந்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார் தீபா.

 பல ஆண்டுகள் போராட்டத்திற்கு குழந்தை பிறந்துள்ளது கவனமாக வளர்க்க வேண்டும் என்பது கணவரும் தானும் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார் தீபா.
தனக்கும்  கணவருக்கும் பல்வேறு மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.   இதனால் உறவினர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு குழந்தை பிறந்தது தொடர்பான தகவல்களை தெரிவிக்க இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.