பிப்.15க்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வரும்!!

 
tn

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை பிப்ரவரி 15க்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

tn

 இது தொடர்பாக ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி , "அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் விரைவுபடுத்தி நடைபெற்று வருகின்றன.  ஜனவரி இறுதிக்குள்  அனைத்து பணிகளும் முடிவுக்கு வந்துவிடும். இதையடுத்து 10 நாட்கள் சோதனை ஓட்டம்  நடைபெறும்.  சோதனை செய்து பார்ப்பது மிகவும் அவசியம்.  

tn

இதற்கு 10 நாள் தேவை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.  சிறு சிறு  பணிகள் மட்டுமே தற்போது உள்ளன.  பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.  ஆறு பம்பிங் நிலையங்களும் தயார் நிலையில் உள்ளது . தற்போது வரை 99 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன" என்றார்.