”கிலோ கணக்கில் காடா துணிகளை வாங்கி ஏழ்மை நகரங்களை மறைப்பது தான் குஜராத் மாடல்”

 
modi

பிரதமர் மோடி 15 ஆண்டுகளாக  ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் கிலோ கணக்கில் காடா துணிகளை வாங்கி ஏழ்மை நகரங்களை மறைப்பது தான் குஜராத் மாடல் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்புப் பேச்சால் சர்ச்சை: தயாநிதி மாறன் வருத்தம் | dayanidhi  maran tweet - hindutamil.in

சென்னை கொருக்குப்பேட்டையில் திராவிட மாடல் என்ற தலைப்பில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது  கொருக்குப்பேட்டை KNS டிப்போ பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பிகே சேகர்பாபு ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜேஜே எபினேசர் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் 

பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமறன், “வட சென்னையில் பறக்கும் சாலை திட்டம் அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் அளவிற்கு பறக்கும் பாலம் திட்டம் தொடங்கப்பட்டது. 70 ரூபாய்க்கு இருந்த பெட்ரோல் இன்று ரூ.110 தாண்டியும், டீசல் நூறு ரூபாயை தாண்டி கொண்டு வந்துவிட்டது. இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் மீது அக்கறை செலுத்தாமல் மூன்று வேளைக்கும் உடையை மாற்றி மாற்றி அணிந்து வெளிநாடு சொல்கிறார் மோடி. குஜராத் மாநிலத்தவரை தவிர இந்தியாவில் யாரும் தொழில் செய்யக்கூடாது என்ற சிறப்பான சேவையை செய்து இந்தியாவை விற்பனை செய்து கொண்டு இருக்கின்றார் மத்திய ஆளுகின்ற பாஜக அரசின் தலைவர் மோடி. அவர்களுக்கு எதிர்க்கட்சிகள் டீ பாய் தூக்கி கொண்டிருக்கிறார்கள். 


உலகத் தலைவர் எல்லாம் குஜராத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த பொழுது காடா துணியை வைத்து மறைத்து தான் குஜராத் மாடலா?  15 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி செய்த மோடி மக்களை செழிப்பாக வைத்திருக்க வேண்டும்  ஆனால் காடா துணி யை கிலோ கணக்கில் வாங்கி ரோட்டில ஏழ்மையான நகரத்தை எல்லாம் மறைத்தார்கள். குஜராத் மாடல் என்று பெருமை பேசும் நிர்மலா சீதாராமன் வெளிநாட்டவர்களுக்கு குஜராத் மாடலை காட்ட வேண்டாமா? கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்று கூறுபவர்கள் குஜராத் மாடலை துணியை வைத்து மறைத்து இருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில்  பெண்கள் ஆண்கள் இருவரும்  வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுடைய அவசர நிலைக்கு பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி செய்து தர முடியாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களின் துயர் துடைப்பதற்காக அரசாங்க பள்ளியில் காலையில் சிற்றுண்டி வழங்கிய ஒரே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுதான் திராவிட மாடல். ஆண்கள் பெண்கள் இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நடத்தும் சூழ்நிலை உள்ளது 

பெண்களும் இன்று படித்து வேலைக்குச் செல்லும் சுதந்திரத்தை கொடுத்தது தான் திராவிட மாடல். தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை செய்து அவசர தேவையான ஊட்டச்சத்தை இலவசமாக வழங்கிய முதல்வர் மு க ஸ்டாலின். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவை தமிழ்நாடு ஆளுகின்ற நாள் வெகு விரைவில் உண்டு. அது முகஸ்டாலின் ஆக கூட இருக்கும். இன்னும் இரண்டு ஆண்டில் டெல்லியில் ஒரு மாற்றம் வரும். பிரதமராக மு க ஸ்டாலின் மாறும் நாள் வரும் இந்தியா முன்னேறும். திராவிட மாடல் இந்தியா முழுவதும் பரவும்” என தெரிவித்தார்