நாளை மறுநாள் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

 
Tamilnadu arasu

போக்குவரத்து தொழிலாளர்கள்  ஆகஸ்ட் 3 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு கட்டாயம் வர  வேண்டுமென  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  எச்சரிக்கை விடுத்துள்ளது 

Tamil Nadu to operate over 3,000 special buses for whole of poll week |  Chennai News - Times of India


இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொது மக்களுக்கு  பாதகம் ஏற்படுத்தும் செயலாகும் என்றும் எனவே ஏற்கனவே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 3 தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் யாரும் பங்கேற்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.மேலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பணியாளர்களுக்கு எந்த விடுப்பும் தரப்படாது என்றும் ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மூன்றாம் தேதி பணிக்கு வரவில்லை என்றால் ஆப்சென்ட் செய்து சம்பளத்தை பிடிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.அன்று பணிக்கு வருகை தராத பணியாளர்கள் மீது துறை ரீதியிலான  ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் , போராட்டம் செய்ய தூண்டினாலும் அவர்கள் மீது சட்ட விரோத போராட்டத்தில் ஈடுபட்டதாக கருதப்பட்டு அவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  போக்குவரத்து கழகம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 3 ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.