டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை - வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

 
ட்

டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்து இருக்கிறது.  இதனால் சம்பா பயிர்கள் மூழ்கி விட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  மக்கள் பாதுகாப்பாக இருக்கு மாறும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது.  அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று விடிய விடிய மழை கொட்டி தீர்த்து இருக்கிறது.  இதனால் அம் மாவட்டங்களில் மக்கள் மழையின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

ட்ட்

  கனமழையில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி விட்டதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர் .  மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. 

 சீர்காழியில் 43.6 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.  அதேபோல் கொள்ளிடத்தில் 31.5 சென்டிமீட்டர்,  சிதம்பரத்தில் 30.7 சென்டிமீட்டர்,  செம்பனார் கோயிலில் 24.2 சென்டிமீட்டர்,  பொறையாரில் 18.3 சென்டிமீட்டர் , மயிலாடுதுறையில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.  இந்த நிலையில் கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்றும் அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்து இருக்கிறது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மழையினால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டதன் பேரில் மாநில பேரிடர் மீட்பு படையின் நான்கு குழுக்கள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.

 கடலோர மாவட்டங்களில் மீட்பு பணியில் படகுகளுடன் தேசிய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் உட்பட 60 பேர் தயார் நிலையில் உள்ளனர்.