திமுக வார்டு உறுப்பினர் கொலை - 5 பேர் சரண்!!

 
tn

 திமுக வார்டு உறுப்பினர் சதீஷ் கொலை வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

tn

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டி ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சதீஷ். 30 வயதான இவர் நடுவரப்பட்டி ஊராட்சியில் ஏழாவது வார்டில் உறுப்பினராக உள்ளார். தேர்தலுக்கு முன்பிலிருந்து அப்பகுதியில் பிரபலமாக இருந்து வந்த இவர் சமூக விரோத செயல்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்து வந்துள்ளார். இந்த சூழலில் பெண் தாதா  லோகேஸ்வரி என்கின்ற எஸ்தர்  கள்ள சந்தையில் மது வகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். அத்துடன் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இது குறித்து சதீஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் லோகேஸ்வரிக்கும் சதீஷுக்கும்  இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த லோகேஸ்வரி சதீஷை தனது வீட்டிற்கு அழைத்து சரமாரியாக தலையில் வெட்டி கேட்டிற்கு வெளியே வந்து கொண்டு வந்து போட்டுவிட்டு வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் காவல்துறையினர் சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில்  திமுக வார்டு உறுப்பினர் கொலை வழக்கில் லோகேஸ்வரி உட்பட ஐந்து பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். நவமணி ,சதீஷ், அன்பு, ராஜேஷ் மற்றும் லோகேஸ்வரி ஆகிய ஐந்து பேரும் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்தது குறிப்பிடத்தக்கது.