’’எங்க அண்ணன் எத்தினி தபா ... போட்டிருப்பார் தெரியுமா? ’’:திமுகவின் தலைவர்கள் ஏன் மௌனம்?வெடிக்கும் கஸ்தூரி

 
k

நாலு நடிகைங்க இருக்குறாளுங்க.  பேரு வரமாட்டேங்குதே..குசுப்பூ,  நமீதா, இன்னொருத்தி இருக்குறாளே யாரு..? ஆங்.. காயத்ரி ரகுராம். அப்புறம் கவுதமின்னு ஒருத்தி. நாங்களும் வடசென்னையில கட்சிய வளர்த்தோம். யார் யாரை வச்சி வளர்த்தோமுன்னு பார்த்தீங்கன்னா? அந்த காலத்துல அண்ணன் சீதாபதி, அண்ணன் டி.ஆர்.பாலு, பலராமனில் இருந்து, இன்னைக்கு இளைய அருணா வரைக்கும் கட்சியை வளர்த்திருக்காங்க. வளர்த்திக்கிட்டு இருக்காங்க.  ஆனா, பிஜேபியில இருக்குற நாலுமே ஐட்டங்க.  இதுல ஒருத்தி சொல்றா... இப்படி மிக தரக்குறைவாக பேசியிருந்தார் திமுக நிர்வாகி சைதை சாதிக்.

kk

சென்னையில் நடந்த திமுக கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்பு மேடையில் திமுக நிர்வாகி ஒருவர் இப்பட தரக்குறைவாக பேசியதற்கு  கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

பெண்களை ஆண்கள் தவறாக  பேசுவது அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தினையும்,  அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது.  இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்.  இது போன்ற ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொள்கின்றார்கள் .  முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா? என்று கேட்டிருந்தார் குஷ்பு .

இதற்கு கனிமொழி எம்பி,  ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .   இதை யார் செய்தாலும் சொன்ன இடம், அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் எக்காரணத்தைக் கொண்டும் இது சகித்துக் கொள்ள முடியாதது . இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க முடிகிறது. ஏனென்றால் எனது தலைவர் மு .க. ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒருபோதும் ஏற்புடையது இல்லை என்று தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து,   fwd of the day:" எங்க அண்ணன் எத்தினி தபா குஷ்பூவை போட்டிருப்பார் தெரியுமா? " SaidaiSathik திராவிட மாடல் பேச்சு. எப்பவுமே அப்படி பேசுறவருதான். கடைசியில கனிமொழி avl மன்னிப்பு கேட்கும்படி ஆயிருச்சு. கட்சி என்ன நடவடிக்கை எடுத்தது?  திமுகவின்  தலைவர்களும் பெண்களும் ஏன் மௌனம் ? என்று பதிவிட்டிருக்கிறார்.