இலங்கை மக்களுக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

 
arivalayam

இலங்கை மக்களுக்கு திமுக சார்பில் ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

mks

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதில், இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் அங்குள்ள  மக்களுக்கு முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40,000 டன் அரிசி, 500 டன் பால் பவுடர் & உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். நன்கொடை வழங்க விரும்புவோர் அரசின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கு எண் அல்லது மின்னனு பரிவர்த்தனை மூலம் வழங்கலாம் என்று குறிப்பிட்டு அதன் விவரங்களையும் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈகைப் பண்பு நிறைந்த தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுகூடி உதவிடுவோம்!நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் அல்லலுறும் இலங்கை மக்களைக் காத்திடுவோம்! திமுக சார்பில் ரூ.1 கோடியும் - கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.