சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை - அமைச்சர் எ.வ.வேலு..

 
ev velu

சென்னை - சேலம்  8 வழி சாலைத்திட்டத்தை திமுக அரசு எதிர்க்கவில்லை என்று  அமைச்சர் எ.வ.வேலு , டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்.

டெல்லியில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம்,   தமிழ்நாடு அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை கடிதம் வழங்கினார்.  அப்போது தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து  அவர் பேசினார்.  அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை - சேலம்  8 வழி சாலைத்திட்டத்தை திமுக அரசு எதிர்க்கவில்லை.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை திமுக எதிர்க்கவில்லை - அமைச்சர் எ.வ.வேலு..

சாலைத்திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து . சேலம் - சென்னை 8 வழிசாலைத்திட்டம் தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார். கப்பலூர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கை அகற்ற ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை விடுத்தோம்.  2 சுங்கச்சாவடிகளுக்கும் விரைவில் மாற்றுவழி ஏற்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குழு விரைவில் ஆய்வு செய்யும் என நிதின் கட்கரி உறுதி அளித்தார்” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.