ஊராட்சி செயலாளர் ராஜசேகர் தற்கொலைக்கு நான் காரணமல்ல- திமுக கவுன்சிலர் அரி

 
அரி

ஊராட்சி செயலாளர் ராஜசேகர் தற்கொலைக்கு நான் காரணமல்ல- கவுன்சிலர் அரிவேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகேயுள்ள ராமநாயனி குப்பம் கிராமத்தின் கிராம ஊராட்சியின் செயலாளராக பணியாற்றியவர் அதே கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (39).  இவர் அவரது தம்பிக்கு நியாயவிலைக்கடையில் வேலை வாங்கி தரக்கூறி, அணைக்கட்டு ஒன்றிய திமுக கவுன்சிலர் அரி என்பவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். 

tn

கவுன்சிலர் அரி பணத்தை வாங்கிக்கொண்டு, வேலை வாங்கிகொடுக்கவில்லை மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த ராஜசேகர் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக கவுன்சிலர் அரி, “வேலூர் ஒடுக்கத்தூர் ராமநாயினிகுப்பம் ஊராட்சி செயலாளர் ராஜசேகர் மரணத்துக்கு நான் காரணமல்ல. ஊராட்சி பணத்தை ராஜசேகரன் தான் 3 ஆண்டுகளாக கையாடல் செய்தார். அவரின் கையாடல் குறித்து ஊராட்சி தலைவர் பிடிஓவிடம் தகவல் கொடுத்தேன்” எனக் கூறினார்.