"தமிழ்நாட்டில் திமுக கூட்டணி தொடரும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

 
mk Stalin biopic

ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுவோர் இந்தியாவின் எதிரிகள் என்று  முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin

மனோரமா செய்தி நிறுவன கான்க்ளேவ் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பு காரணமாக கருத்தரங்கு நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை. தமிழ், மலையாளம் மொழிகளுக்கு இடையே ஆழமான உறவு இருக்கிறது. கடந்த ஏப்ரலில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் கலந்துகொண்ட போது மக்கள் அளித்த வரவேற்பு நெகிழ வைத்தது மதசார்பற்ற இந்தியாவை முன்னாள் பிரதமர் நேரு உருவாக்கினார்.இந்தி ஒருபோதும் திணிக்கப்படாது என உறுதிமொழி அளித்திருந்தார் ஜவஹர்லால் நேரு.  நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ மொழி வாரி மாநிலங்களை நேரு ஏற்படுத்தித் தந்தார்.

cm stalin

இந்தியா என்பது கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிரான செயல்கள் நடைபெறுகின்றன. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும் சாத்தியமில்லை. ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் கூட்டாச்சி தத்துவத்தை கொண்ட இந்திய திருநாட்டின் எதிரிகள் ஆவர்.  மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும் .மாநில அரசுகள் வலுவாக இருப்பது மத்திய அரசுக்கு பலம் தானே தவிர பலவீனம் அல்ல . நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பேச்சுரிமை மறுக்கப்படுகிறது; இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலை. இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். 

mk stalin

தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல; கொள்கைக்கான கூட்டணி  . தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என்றார்.  பிரதமர் வருகையால் திமுக -பாஜக கூட்டணி ஏற்படும் என்று தகவல் பரவிய நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது உரையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.