மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 
arivalayam

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் 3 பேரும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை எம்பிக்கள் பதவி காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.  இதனால் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் ஆறு மாநிலங்களவை எம்பிக்கள் பதவி காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடையவுள்ளது.  திமுக எம்பிக்கள் டி கே. எஸ். இளங்கோவன்,  ஆர். எஸ். பாரதி,  ராஜேஷ்குமார்,  நவநீதகிருஷ்ணன்,  விஜயகுமார்,  எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் ஆகிய ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.  திமுகவுக்கு மூன்று எம்பி பதவிகள்,  அதிமுகவுக்கு இரண்டு எம்பி பதவிகள் கிடைக்கும் என்றும்,  ஆறாவதாக உள்ள எம்பி பதவியை காங்கிரஸ் திமுகவுடன் கேட்டு பெரும் என்றும் தகவல் வெளியானது. 

dmk

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் 3 பேரும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 2022 ஜூன் 10 அன்று நடைபெறவிருக்கும் ஆறு மாநிலங்களவை  உறுப்பினர்களுக்கான தேர்தலில், தி.மு.க கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர். தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக தஞ்சை சு. கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா. கிரிராஜன், ஆகியோர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.