திமுக மாணவர் அணி சார்பாக ஏப்ரல் 30, மே 1ம் தேதியில் தேசிய அளவிலான மாநாடு

 
arivalayam

திமுக மாணவரணி சார்பாக கல்வி - சமூக நீதி - கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 தேதியில் தேசிய அளவிலான மாநாடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளதாக திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் தெரிவித்துள்ளார்.

திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேசியதாவது: திமுக மாணவரணி சார்பாக கல்வி - சமூக நீதி - கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 தேதியில் தேசிய அளவிலான மாநாடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் "நீட் கியூட் நுழைவு தேர்வுகளும் அதன் பின்னணியில் உள்ள மர்மங்களும்", "தேசியக் கல்விக் கொள்கை ஒரு பாசிச நோக்கம்" "கல்விக் கொள்கைகளின் மாநில சுயாட்சி", "இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்", "காவியமாகும் கல்வி நிறுவனங்கள்", "கூட்டத்துக்கு எதிராக அச்சுறுத்தல்களும்", "சிதையும் ஜனநாயக நிறுவனங்கள்" என ஏழு தலைப்பின் கீழ் நீதியரசர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மாணவர்கள் உடன் கலந்துரையாட உள்ளனர்.

Kanchi MLA

இந்த மாநாட்டில்  சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மேலும் முக்கிய அரசியல்வாதிகளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹீவா மொய்த்தா , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ்குமார், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்ட அமைச்சர் சோமசுந்தர பாரதி உள்ளிட்ட பல்வேறு அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியின் மாணவர் அணிகளும் கலந்து கொண்ட உள்ளது. மேலும் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டத்தில் இருக்கும் மாணவர்களும் தெலுங்கானா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.1000 முதல் 1500 மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" இவ்வாறு தெரிவித்தார்.