திமுக எம்.பி., திருச்சி சிவா மருத்துவமனையில் அனுமதி!

 
tn

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

rn

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், திமுகவின் முக்கிய தலைவர்கள் ஒருவராகவும் வலம் வருபவர் திருச்சி சிவா.  இவர் திமுக-வின் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், இலக்கியவாதியாகவும் திகழ்கிறார். இலங்கைவாழ்  தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் அதிகம் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.  இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர்  கடந்த 18ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டுமென இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமலில் ஈடுபட்டன.  அந்த வகையில் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற திருச்சி சிவா தற்போது உடல்நல குறைவால் கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Tiruchi siva

டெல்லி, ஆர்.எம்.எல். மருத்துவமனையில் திமுக எம்.பி. திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.