திமுகவின் உட்கட்சி தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!!

 
arivalayam

திமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.
 

rajinikanth and cm stalin

திமுகவில் கிளை, பேரூர் கழகம்,  மாநகர வட்ட கழகம், ஒன்றிய, நகர, மாநகர, பகுதிகழகம் ,மாநகரக் கழகம் , மாவட்டம் என பல்வேறு கட்டங்களாக 15வது உட்கட்சி தேர்தல் ஆனது நடைபெற உள்ளது.  இதற்காக இன்று  முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.  சென்னை: திமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கும் நிலையில் மாவட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 25ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது.

stalin
பொறுப்பு ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக தலைமை கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் , வேட்பு மனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர் ,ஒன்றிய, நகர, நகர ,பகுதி, மாநகர செயலாளர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாக தான் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.