திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் - முதல்வர் ஆலோசனை!!

 
arivalayam

திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

stalin

 

திமுகவில் கிளை, பேரூர் கழகம்,  மாநகர வட்ட கழகம், ஒன்றிய, நகர, மாநகர, பகுதிகழகம் ,மாநகரக் கழகம் , மாவட்டம் என பல்வேறு கட்டங்களாக 15வது உட்கட்சி தேர்தல் ஆனது நடைபெற உள்ளது.  இதற்காக வருகிற 22 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.  அத்துடன் கட்சி நிர்வாக வசதிக்காக மாவட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  குறிப்பிட்ட நாட்களில் பொறுப்பு ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக தலைமை கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வேப்பு மனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர் ,ஒன்றிய, நகர, நகர ,பகுதி, மாநகர செயலாளர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாக தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cm stalin

இந்நிலையில் திமுகவின் மாவட்ட அமைப்பு தேர்தல் தொடர்பாக கட்சி தலைவரும்,  முதல்வருமான மு.க. ஸ்டாலின்,  அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.  திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் வருகிற 22, 23, 24 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். மாவட்டங்களில் அவைத்தலைவர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  திமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.