"தமிழனாக பெருமைப்பட்டேன்" - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பாராட்டு!!

 
annamalai

செஸ் ஒலிம்பியாட்  போட்டி அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கிய நிலையில் இன்று முதல் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன.  நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.  தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும்  கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

இதை எடுத்து பாஜக மையக் குழு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை,  செஸ் போட்டிக்கான பிரதமரின் பங்கு என்ன என்று கோடிட்டு முதல்வர் பேசினார் . ஐயாயிரம் ஆண்டு பாரம்பரிய வரலாற்றை காண்பித்தது தமிழனாக பெருமைப்பட்டேன்.  எனவே முதல்வரை பாராட்டியே ஆக வேண்டும் என்றார்.

tn

அத்துடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 1967ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழர்களின் கலாச்சார சிறப்பும், பெருமையும், ஆன்மீக வழித்தடத்தையும் இனியும் மறைத்திட இயலாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது #ChessOlympiad வரவேற்பு நிகழ்ச்சி. இச்சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்களும், நன்றியும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

tn

இந்நிலையில் பாஜக - திமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்செல்லாம் எதுவும் கிடையாது.  செஸ் ஒலிம்பியாட் மூலமாக இந்தியாவையும் தமிழக கலாச்சாரத்தையும் பெருமைப்படுத்திய தமிழக அரசுக்கும்,  முதல்வர் ஸ்டாலினுக்கும் பாராட்டுக்கள்.ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை மிகவும் அற்புதமாக நடத்திய தமிழக அரசுக்கு பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  ஆனால் பாஜக கொள்கை கொண்ட கட்சி. இதனால் எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றார்.