தி.மு.க. மாணவர் அணி தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் நியமனம் - துரைமுருகன் அறிக்கை

 
arivalayam

தி.மு.க. மாணவர் அணித் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  தி.மு.க. சட்ட திட்டம் விதி-18, 19 பிரிவுகளின்படி மாநில மாணவர் அணித் தலைவர் செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி 
மாணவர் அணித் தலைவராக இரா. ராஜீவ்காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர் அணி செயலாளராக சி.வி.எம்.பி.எழிலரசன் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர் அணி இணை செயலாளர்களாக  பூவை சி. ஜெரால்டு, எஸ். மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


மாணவர் அணி துணைச் செயலாளர்களாக மன்னை த. சோழராஜன், ரா.தமிழரசன்,அதலை பி.செந்தில்குமார், கா. அமுதரசன், பி.எம். ஆனந்த், கா.பொன்ராஜ், 
வி.ஜி. கோகுல், திருமதி பூர்ண சங்கீதா,  திருமதி ஜெ. வீரமணி,  உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.