மக்களுக்கு பிரச்சனை என்றால் கண்ணயாக இந்த அண்ணியார் வருவேன் - பிரேமலதா விஜயகாந்த்

 
premalatha

மத்திய, மாநில அரசிடம் நிதி இல்லை என்றால் ஆண்டு கொண்டிருகிக்கின்ற அமைச்சர்களிடம் உள்ள ஊழல் பணத்தை வசூல் செய்தாலே எல்லா துறைகளையும்  அரசு சிறப்பாக நடத்த முடியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

பிரேமலதா விஜயகாந்த்

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் ஜி.எஸ்.டி வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்திய மத்திய, மாநில அரசை கண்டித்து தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக மாநில பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். இதில் 200 க்கும் மேற்பட்ட தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “எங்களுடைய எல்லா நல்ல தருணங்கலும் மதுரையில் தான் அமைந்தது. இது பணத்திற்கு சேர்ந்த   கூட்டம் அல்ல, இது தானாக சேர்ந்த கூட்டம். மத்திய, மாநில அரசிடம் நிதி இல்லை என்றால் ஆண்டு , ஆண்டு கொண்டிருகிக்கின்ற அமைச்சர்களிடம் உள்ள ஊழல் பணத்தை வசூல் செய்தாலே எல்லா துறைகளையும்  அரசு சிறப்பாக நடத்த முடியும். மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மக்களிடம் வரி பணத்தை வசூல் செய்து மக்களை வஞ்சிக்கிறது. மின்கட்டணம் , சொத்து வரி  என திமுக அரசு கொடுக்காத வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள். எப்படி நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்தாலோ,அது போல மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், இன்றைக்கு கண்ணகியாகி நான் எல்லா இடங்களிலும் அண்ணியராக நான்  வருவேன்” எனக் கூறினார்.