நாளை சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர்..

 
  நாளை சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர்..

மேல்சிகிச்சைக்காக  அமெரிக்கா சென்றிருந்த  இயக்குநர் டி ராஜேந்தர், நாளை ( ஜூலை 22) தாயகம் திரும்ப  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் 19 ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 14 ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்க புறப்பட்டு சென்றார். அதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரண்டு வார காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தெரிவித்தார்.  அதன்படி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது நலமுடன் இருக்கிறார்.  

  நாளை சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர்..

அண்மையில் நலம்பெற்று மகன்கள் சிலம்பரசன்,குறளரசன்,இலக்கியாவின் மகன் சேஷன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.  இந்நிலையில் தற்போது சிகிச்சைகளை முழுமையாக முடித்துக்கொண்டு டி.ராஜேந்தர் நாளை ( ஜூலை 22) சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.   அவர் நாளை அதிகாலை 2 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை அவர் வந்தடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அவரது  இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் சேஷன் ஆகியோரும் அவருடன் நாடு திரும்புகின்றனர். இந்நிலையில்  சிகிச்சை முடிந்து பூரண நலம்பெற்றதை அடுத்து  வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் டி ஆரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

  நாளை சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர்..

  நாளை சென்னை வரவுள்ள  டி.ராஜேந்தர் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  சந்தித்து  நன்றி தெரிவிக்க உள்ளார். தான் முழு உடல் நலம் பெற்று மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் துடிப்புடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள், குடும்ப நண்பர்கள், கலையுலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டி.ஆர் நன்றி தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் நாளை அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க லட்சிய திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். டி.ஆர் தாயகம் திரும்பும் அதே நாளில் , அதாவது நாளை  தான் அவரது மகன் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள 'மஹா' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.