#Breaking வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

 
tn

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஆகஸ்ட் மாதத்தையொட்டி ரூ.36.50 காசுகள் குறைந்துள்ளது.

tn

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் மாதம் தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகிறது.  அதே போல ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர்  விலையும் மாத முதல் நாளிலேயே  உயர்வை சந்தித்து வருகிறது.  எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது.  கடந்த மாதம்  வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் ஏதுமில்லை.இந்த சூழலில் கடந்த இம்மாத தொடக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 187 ரூபாய் குறைந்தது. அதன்படி, 2,373 ரூபாயாக இருந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும்  2,186  அதே மாதத்தில் ரூ.8.50 குறைந்து  ரூ.2,177.50 ஆக விற்பனையாகி வந்தது. 

tn
இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை  ₹36.50 குறைந்து, ₹2141-க்கு விற்பனையாகி வருகிறது. அதேசமயம் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ₹1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால் வணிகர்கள், டீக்கடை உரிமையாளர்கள்  சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.