சூறாவளிக்காற்று வீசக்கூடும்.. இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..

 
 சூறாவளிக்காற்று வீசக்கூடும்.. இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,  கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

நேற்று வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி  இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்லக்கூடும் எனவும்,  இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வருகிற 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 சூறாவளிக்காற்று வீசக்கூடும்.. இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..

இந்நிலையில், மீனவர்களுக்கான எச்சரிக்கையில்,   “12.11.2022: வட தமிழக கடலோரப்பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள்,   தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

13.11.2022: குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 சூறாவளிக்காற்று வீசக்கூடும்.. இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..

14.11.2022: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16.11.2022: தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளது.