செஸ் தீமில் மாறிய டீக்கடை - செல்ஃபி எடுத்து மகிழும் வாடிக்கையாளர்கள்!!

 
tn

செஸ் ஒலிம்பியாட் போட்டி காரணமாக சென்னை மாநகரமே செஸ் தீமில் உருமாறி உள்ளது . கடந்த 28ஆம் தேதி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விழாவை சிறப்புற தொடங்கி வைத்தார். 186 நாடுகளை சேர்ந்த 2000ற்கும்  மேற்பட்ட வீரர்,  வீராங்கனைகள்  இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். நேற்று முதல் போட்டி தொடங்கியுள்ள நிலையில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று மிக சிறப்பான துவக்கத்தை அளித்துள்ளனர். 

tn

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசு சார்பில் செஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டன.  குறிப்பாக சென்னை நேப்பியர் பாலம் செஸ் போர்டு கட்டங்களை போன்று கருப்பு வெள்ளை நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்டு பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

tn

அந்த வகையில் சென்னை அண்ணாநகர் கந்தசாமி கல்லூரிக்கு எதிரே உள்ள தேநீர் கடையில் முழுவதும் செஸ் குறித்த விழிப்புணர்வுடன் செஸ் தீமில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோசப்  என்பவர் நடத்திவரும் இந்த தேநீர் கடையில் செஸ் போர்டுடன் தேநீர் அருந்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதனால் நண்பர்களுடன் வருபவர்கள் செஸ்  விளையாடி கொண்டே தேநீர் அருந்தலாம்.  பார்ப்பதற்கு மிகவும் புத்துணர்ச்சியுடனும்,  அழகாகவும் காட்சியளிக்கும் இந்த கடையுடன் பலரும் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.