குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் விரைவில் கைது - போலீசார் தகவல்

 
tn

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tn

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் சாதிய கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன.  இங்கு தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமலும் அவர்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மரத்தை கலந்து சில விஷமிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.  மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தெரியவந்த நிலையில்,  இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தண்ணீர்  தொட்டில் மனிதக் கழிவு கலந்தது யார் என்பதை கண்டுபிடிக்க திருச்சி டிஐஜி சரவணன் சுந்தரால் , புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஎஸ்பி ஆய்வாளர் உட்பட 11 பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சந்தேகப்படும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யவும்,  ஒளிவு மறைவின்றி வெளிப்படை தன்மையுடன் முழு முயற்சியுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக 20 பேர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இதுவரை 70 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது . இந்த இழிச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஓரின நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.