பிரதாப் போத்தன் இறுதி சடங்கு - திரையுலகினர் பங்கேற்பு!!

 
tn

மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் இறுதிச் சடங்கு இன்று கீழ்ப்பாக்கம் வேலங்காடு மயானத்தில் நடைபெற்று முடிந்தது.


tn

பிரபல நடிகரும் இயக்குநருமான பிரதாப்  போத்தன்  உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.  தமிழ், தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

tn

 இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரதாப் போத்தன்  உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான திரையுலகை சேர்ந்த நபர்கள் வந்து தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்திவிட்டு சென்றனர்.  இதை தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் பிரதாப் போத்தனின் உடல் இல்லத்தில் இருந்து கீழ்ப்பாக்கம் வேலங்காடு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது . கிறிஸ்தவ முறைப்படி மலர் வளையம் வைத்து பிரார்த்தனை மேற்கொண்ட பிறகு இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

tn

இன்று பிரதாப் போத்தன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு   நடிகர் சத்யராஜ் ,நடிகை ரேவதி, சின்னி ஜெயந்த், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர்  அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.