மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா.வின் உடல் தகனம்

 
thirumagan

மாரடைப்பால் மரணமடைந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈ.வெ.ரா.வின் உடல் இன்று பிற்பலில் தகனம் செய்யப்பட்டது. 

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான  திருமகன் ஈவேரா எம்எல்ஏ மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது (46) . எம்எல்ஏ திருமகனின் மரணம் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈரோட்டில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று , அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி,  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், காந்தி, மதிவேந்தன, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் நேறில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து இறுதி சடங்குகள் நடந்து திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மின்மயானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிற்பகலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்களும் வழிநெடுக மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.