விரைவில் உண்மையான பொதுக்குழு நடத்தப்படும்- கோவை செல்வராஜ்

 
kovai selvaraj

விரைவில் உண்மையான பொதுக்குழு நடத்தப்படும் என ஒபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்,

கோடநாடு வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் முதல்வருக்கு Kovai Selvaraj  வேண்டுகோள் nba 24x7 - nba 24x7 - செய்திகள் | தேசிய செய்திகள் | விளையாட்டு  ...

ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் கோவை செல்வராஜ் செய்தியாளர்கள் சந்தித்தார் அப்போது பேசிய அவர் “ஓபிஎஸ் கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி, K.p முனுசாமி,திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட  22 நபர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். விரைவில்
அனைத்து சார்பு அணிகளுக்கும் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நிர்வாகிகளையும் செயலாளர்களையும் நியமிப்பார்கள். 

கோடநாடு வழக்கில் குற்றவாளி யார் என தெரிந்த பிறகு அதிமுக தொண்டர்கள் துரத்தி அடிப்பார்கள். பொன்னையன் கூறியதைப் போல ஜாதி மத கட்சியாக அதிமுக  மாறிவிட்டது. எம்.எல். ஏக்கள் அனைவரும் புரோக்கர்கள் போல் செயல்பட்டு வருகின்றன. நாங்கள் தெரியாமல் பொதுக்குழுவுக்கு சென்று விட்டோம் என்று கட்சியின் நிர்வாகிகள் ஓபிஎஸ்- இடம் தொலைபேசியில் அழைத்து பேசிக் கொண்டிருக்கின்றனர். உண்மையான பொதுக்குழு உறுப்பினர்களோடு அண்ணன் ஓபிஎஸ்  தலைமையில் விரைவில் பொதுக்குழு நடைபெறும். அதே போன்று தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள்” எனக் கூறினார்