கோவையில் பட்டப்பகலில் அரிவாளை காட்டி மிரட்டி அரங்கேறிய கொள்ளை; பதைபதைக்க வைக்கும் காணொலி

 
theft

கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையத்தில் கலெக்சன் பணம் ரூ.10 லட்சத்தை வங்கியில் செலுத்த வந்து கொண்டிருந்த டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளல் காட்டி மிரட்டி கொள்ளை முயற்சி செய்தவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை எண் : 1811 செயல்பட்டு வருகிறது.இதன் சூப்பர்வைசராக உதகையை சேர்ந்த விஜய் ஆனந்த்(46) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில்   வழக்கம் போல் கலெக்சன் பணம் ரூ.10 லட்சத்தை தனது டூவீலரில் வைத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கிக்கு சென்றுள்ளார்.


அப்போது,சிறுமுகை ரோடு ஆலாங்கொம்பு அருகே வந்து கொண்டிருந்தபோது 2 இருசக்கார வாகனத்தில் வந்த 4 பேர் விஜய் ஆனந்தை அரிவாளலை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதே நபரிடம் கடந்த ஜூலை மாதம் பணத்தைப் பறிக்க ஒரு கும்பல் முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிறுமுகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீடியோவில் பதிவாகியுள்ள காட்சியில் கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் சிறார்கள் போன்று பதிவாகியுள்ளது. கொள்ளையில் ஈடுபடுவதற்கு முன் பொதுமக்கள் வந்து சத்தம் எழுப்பியதால் அவர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.