தேவர் குருபூஜை - பசும்பொன்னில் டிடிவி தினகரன் மரியாதை!!

 
ttv

தேவர் திருமகனார் குரு பூஜை விழாவில் பசும்பொன்னில் டிடிவி தினகரன் மரியாதை  செலுத்துகிறார்.

ttn

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுதலைப் போராட்ட வீரரும், மக்களின் அன்பைப் பெற்று சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தை அலங்கரித்தவரும், தென்னாட்டு போஸ் என்று இந்திய அளவில் புகழ் பெற்றவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரண்டு கண்களாகப் போற்றிய மாபெரும் தலைவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருக்கிறது.

ttv

இதையொட்டி தெய்வீக திருமகனின் நினைவாலயம் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்திற்குச் சென்று அன்றைய தினம் காலை 10 மணி அளவில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி
தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வட்ட/வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.