'2 முறை ஒத்திவைப்பு' - குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு!!

 
election

குற்றாலம் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 25-ம் நடைபெறுகிறது. 

tn

தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டாவது முறையாக கடந்த மார்ச் 26ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. போதிய உறுப்பினர்கள் வருகை தராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் கடந்த 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் குற்றாலம் பேரூராட்சி தேர்தல் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

tn

இதுகுறித்து குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் விடுத்துள்ள அறிக்கையில், டி.பி.313 குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி, பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக பேரூராட்சி உறுப்பினர்களின் கூட்டம் 25.05.2022 அன்று 9.30 முற்பகல் மணிக்கு குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும்.இப்பதவி தொடர்புடைய தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 5/1920-ன் ஓதுக்கீடு ஒதுக்கப்படாதவை பொது 2006 ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் விதி 98, 99ன் படி இக்கூட்டம் கீழே கையொப்பமிட்ட என்னால் கூட்டப் பெற்று தலைமை வகித்து நடத்தப்பெறும். இக்கூட்டம் குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி அலுவலக மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும். தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பேரூராட்சி அனைத்து வார்டு உறுப்பினர்களும் கோரப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.