ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்தவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

 
madurai high court

தான் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து திருமணம் செய்தவர் மீது மோசடி (பிரிவு 420) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கணவர் ஆண்மையற்றவர் என மனைவி குற்றம்சாட்டுவது கொடுமைக்கு சமம்”..! -  உயர்நீதிமன்றம் | Tamil News Online | Latest News In Tamil | Breaking News  Tamil | Tamil News Live | தமிழ் ...

மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த இர்பான நஸ்ரின்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். தனது கணவர் ஆண்மையற்றவர் என்பதை மறைத்து தன்னை திருமணம் செய்த தனது கணவர் மீதான முதல் தகவல் அறிக்கையில்  மேசடி 420 உட்பட சில பிரிவுகளில் சேர்க்க கோரி மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், மனுதாரரின் கணவர் கடந்த  ஆண்டு ஏப்ரல் 2021  திருமணம் நடைபெற்று உள்ளது. பின்னர் சென்னையில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர். ஆனால் கணவரின் செயலில் சில மாற்றங்கள் தெரிந்த அதாவது தனது கணவர் ஆண்மை இல்லாதவர் என்றும் இதனால் இவருக்கு முன்பே திருமணம் நடந்து விவகாரத்து பெற்றுள்ளார் என்பதும் தெரிய வருகிறது. மேலும் ஆண்மையற்றவராக இருந்ததை மறைத்து திருமணம் செய்து 200 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக பெற்றுள்ளனர். திருமணத்திற்கு பின்பு தெரியவந்த நிலையில் கணவர் தலாக் முறையில் விவாகரத்து கூறிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார். மனுதாரரின் கணவர் மீது தவறு இருக்கும் சூழலில் அதை மறைத்து திருமணம் செய்துள்ளார்.

ஆகவே, மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கில் மோசடி  பிரிவு 417, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.