வேலுமணிக்கு எதிரான வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவு

 
sp

மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Why former AIADMK minister S.P. Velumani faces heat over corruption  allegations - India Today Insight News

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆட்சியில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு, அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என புகார் முடித்து வைக்கப்பட்டது.

பின்னர்  வேலுமணிக்கு எதிரான புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முந்தைய ஆட்சியில் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையும் வேலுமணி தரப்புக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில்,அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.அப்போது வேலுமணி சார்பில்,அதுவரை கடுமையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா,புலன்விசாரணை நடைபெற்றுவருவதாகவும்,தடை ஏதும் விதிக்ககூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.இதையடுத்து  லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நிலை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.