சென்னை பாரிமுனை அருகே 256 கடைகளுக்கு மாநகராட்சி சீல்!!

 
tn

ரூ.60 லட்சம் வாடகை நிலுவை தொகை காரணமாக  சென்னை பாரிமுனை அருகே 256 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

சென்னை மாந‌க‌ரின் முக்கியமான‌ வ‌ர்த்தக‌/வ‌ணிக‌ மைய‌மாக பரபரப்பு குறையாமல் செயல்பட்டு வருவது பாரிமுனை. பாரிமுனையில் ஏராள‌மான‌ நிறுவ‌ன‌ங்களின் அலுவ‌லக‌ங்க‌ளும், க‌டைக‌ளும் உள்ள‌ன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இப்பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடங்கள் நிறைய உள்ளன. 

tn

இந்நிலையில் ரூ.60 லட்சம் வாடகை பாக்கி காரணமாக  சென்னை பாரிமுனை அருகே 256 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, மண்ட லம்-5, வார்டு-59க்கு உட்பட்ட, NORTH FORT ROADல் உள்ள கடை எண் 348 வாடகை மற்றும் நிலுவை தொகை செலுத்தாமல் ரூபாய் 27720/- இன்று வரை நடத்தப்பட்டு வந்த இக்கடை 04.08.2022 (இன்று) பெருநகர சென்னை மாநகராட்சியால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 

tn

அதேபோல் பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, மண்ட லம்-5, வார்டு-59க்கு உட்பட்ட, NORTH FORT ROADல் உள்ள கடைஎண்_3463347 வாடகை மற்றும் நிலுவை தொகை செலுத்தாமல் ரூபாய் 347 - 27723 - இன்று 484 வரை நடத்தப்பட்டு வந்த இக்கடை 04.08.2022 (இன்று) பெருநகர சென்னை மாநகராட்சியால் பூட்டி சீல் வைக்கப்பட்டது என்று சம்பந்தப்பட்ட கடைகளில் மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியுள்ளது.