அக்டோபர் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

 
coronavaccine

அக்டோபர் முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் புதன்கிழமை தோறும் போடப்படும் என்று மா. சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.

GHS says vaccine hesitancy is impeding COVID-19 fight

தமிழக முழுவதும் பொது சுகாதாரத்துறை சார்பில் இன்று 37வது  கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை தி.நகரில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொடர்ந்து தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி போடும் பணியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி இலவசம் தொடருமா அல்லது தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்த ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் இலவச தடுப்பூசி தொடருமா ? என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்

அக்டோபர் முதல் தடுப்பூசி செலுத்துவதில் சிறிய மாற்றம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செலுத்தப்படும் தடுப்பூசிகள் புதன்கிழமைகளில் போடப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாக, 2127 ஆரம்ப சுகாதார நிஙையங்களில்,  8713 துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், சென்னையில் உள்ள 159 நகர்புற சுகாதார நிலையங்களில், 292 வட்டார மருத்துவமனைகளிலும், 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தமாக 11,333 அரசு மருத்துவமனைகளில் அக்டோபர் முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து தடுப்பூசிகளும் செலுத்தப்படும். 

பிறந்த குழந்தை முதல், முதியவர்களுக்கு வரை என 13 வகையான தடுப்பூசிகளும் செலுத்தப்படும். அடுத்த வாரம் நடைபெறும் 38-வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் கடைசி தடுப்பூசி முகாமாக இருக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் 30ம் தேதியுடன் மெகா தடுப்பூசி முகாம் நிறைவு.அதன் பின் பூஸ்டர் டோஸ் தப்பூசிக்கு சலுகை கிடைக்குமா என்பது தெரியவில்லை. Influenza காய்ச்சல் பற்றி பேசிய அவர் 1044 பேர்கள் influenza காய்ச்சல் மூலம் பாதிக்கப்ப்பட்டு உள்ளனர். அதில் மருத்துவமனையில் 68 பேர் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டனர். பள்ளிகளுக்கு விடுமுறை தற்பொழுது அளிக்கும் அவசியம் தேவை இல்லை” எனக் கூறினார்.